tamilnadu

img

16.5 சதவிகித வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம்... எஸ்பிஐ வங்கி ஆய்வில் எச்சரிக்கை

புதுதில்லி:
இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 16 சதவிகிதவீழ்ச்சியைச் சந்திக்கும் என்றுஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மிகப் பெரிய வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’,இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா பாதிப்பால் ஏப்ரல் - ஜூன் காலாண்டிற்கான உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 16.5 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்திக் கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் மே மாதத்தில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 20 சதவிகித வீழ்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது.அதற்கேற்பவே, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள்,தங்களின் ஏப்ரல் - ஜூன் காலாண் டுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில், சுமார்75 சதவிகித நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியையே சந்தித்திருக்கின்றன.விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்தல், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து உள்ளன.

இந்நிலையில்தான், இந்திய பொருளாதார வீழ்ச்சியானது, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 16.5 சதவிகிதமாக இருக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.கொரோனா பாதிப்புகளைப் பொறுத்தவரையில் தற்போது கிராமப்பகுதிகளிலும் கொரோனா ஊடுருவல் அதிகரித்து உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற மாவட்டங்களில் புதிய தொற்றுகள் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது.எனவே, இந்தியாவின் மொத்த உள் மாநில உற்பத்தியில் கிராமங்களின் பங்களிப்பு 2 முதல் 4 சதவிகிதம் வரையில் இருப்பதால் அடுத்து வரும் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும் எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

;