புதுதில்லி:
இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற 7-வது சுற்று பேச்சு வார்த்தை திங்களன்று சுஷுல் பகுதியில் நடைபெற்றது. இந்தியா தரப்பில் லே பகுதியில் அமைந்துள்ள 14 கார்ப்ஸ் பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீனா தரப்பில் உயர் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.