tamilnadu

img

இந்திய வங்கிகளில் ரூ. 1.85 லட்சம் கோடி மோசடி.... ஒரே ஆண்டில் இரண்டரை மடங்கு அதிகரிப்பு...

புதுதில்லி:
இந்திய வங்கிகளில், 2019 -20 நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி 2019 - 20நிதியாண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள் ளது. அதில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

2018-19 நிதியாண்டில் வங்கி மோசடிகளின் மதிப்புரூ. 71 ஆயிரத்து 543 கோடியாக இருந்தது. ஆனால், இது 2019 - 20 நிதியாண்டில் இரண்டரை மடங்கு அதிகமாக, ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி மதிப்புக்கு வங்கிமோசடிகள் நடைபெற்றுள் ளன. மேலும், 2019 - 20 நிதியாண்டில் மோசடிகளாக அறிவிக்கப்பட்ட மொத்த வங்கி மோசடிகளில், முதல் 50 கடன் மோசடிகளின் மதிப்பு மட்டும்76 சதவிகிதம் என்பதும் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.

இந்த மோசடிகளானது பொதுத்துறை வங்கிகளில் 80 சதவிகிதமாகவும், தனியார்துறை வங்கிகளில் 18.4 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.வங்கி மோசடி நிகழ்ந்த தேதிக்கும், வங்கிகள் மற்றும்நிதி நிறுவனங்கள் அந்தமோசடிகளை கண்டறிவதற் கும் சராசரியாக 2 ஆண்டுகள் வரை ஆவதை ரிசர்ச் வங்கி அறிக்கை தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டுள் ளது.மேலும், இந்த பின்னடைவுக் காலம் ரூ. 100 கோடி அல்லது அதற்கு அதிக அளவு பணம் சம்பந்தப்பட்ட கடன்களில்தான் அதிகமாக இருந்துள்ளது என்றும், மொத்த வங்கி மோசடிகளில் சராசரி பின்னடைவுக் காலம்63 மாதங்களாக இருந்துள் ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

;