புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்புகளை கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றின் மூலமே தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மக்கள் கைகளைக் கழுவதற்கு போதுமான தண்ணீரோ, சோப்பு வசதியோ என்று வாஷிங்டனை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு (Institute for Health Metrics and Evaluation-IHME) என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் சுமார் 5 கோடி மக்களுக்கு கைகளை கழுவுவதற்கு போதிய வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஐஎச்எம்இ நிறுவனம், இதனால், பணக்கார நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகம் என்றும் எச்சரித்துள்ளது.