tamilnadu

img

ஹெராயின் போதை மருந்து விற்பனை.... கையும் களவுமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ மகன்

இடாநகர்:
அருணாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வின் மகன் போதைமருந்து விற்று, கையும் களவுமாக சிக்கியுள்ளார்.அருணாசலப் பிரதேச மாநிலத்தில், தலைநகர் வளாகம் என்று அழைக்கப்படும் இடாநகர் மற்றும் நகரலகுன் பகுதியில் போலீசார் வாகன ரோந்து சென்றுள்ளனர். அப்போது, 4 இளைஞர்கள் போதையில் கலாட்டா செய்வதைப் பார்த்ததும், காவல்துறை கண்காணிப்பாளர், அந்த இளைஞர்களைக் கைது செய்து, போதை மருந்துஎப்படி கிடைத்தது? என விசாரணை நடத்தியுள்ளார். 
அப்போது, லுலு என்பவரிடமிருந்தே போதை மருந்தை வாங்கியதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல போதை மருந்தை விற்ற லுலு என்பவர், பாஜக எம்எல்ஏ லோகம் தசார் என்பவரின் மகன் என்பதும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனைவி வீட்டில் பதுங்கியிருந்த லுலு-வை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 கிராம் ஹெராயின், ரொக்கப் பணம், காலி ஊசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

;