tamilnadu

img

பாஜக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 10 ஆண்டுகள் சிறை!

உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கில் தீர்ப்பு

புதுதில்லி, மார்ச் 13 - உத்தரப்பிரதேச மாநிலம் உன்னா வில் கடந்த 2017-ஆம் ஆண்டு 17 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது  சகோதரர் அதுல் சிங் செங்கார் உள்ளிட் டோர் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி னர். இந்த வழக்கில், குல்தீப் சிங் செங்கா ருக்கு கடந்த 2019 டிசம்பர் 20-இல் தில்லி உயர் நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறுமியின் தந்தையை கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி அடித்துக் கொன்ற வழக்கில், குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது தனியாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அந்த வழக்கில் நீதிபதி தர்மேஷ் சர்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில், குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 லட்சம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராதத் தொகை, தந்தையை இழந்து 3 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 4  சிறுவர்களை பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள உன்னாவ் சிறுமிக்கே வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராகப் போராடியதற்காக, பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாராட்டிய நீதிபதி சர்மா, சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக காவல்துறை சார்பில் அடுத்தடுத்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தார்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து, மத்திய புலனாய்வுக் கழக அதிகாரிகளிட மும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி னார். முன்னதாக, “தனக்கு இரண்டு மகள் கள் இருக்கிறார்கள்; என்னை விட்டு விடுங்கள்” என்று முன்னாள் எம்எல்ஏ செங்கார் நீதிமன்றத்தில் கெஞ்சினார்.  அப்போது, “உங்களுக்கு மட்டுமா குடும்பம் இருக்கிறது, அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. குற்றம் செய் வதற்கு முன் இதையெல்லாம் யோசித் திருக்க வேண்டும்” என்று கண்டிப்பு காட்டிய நீதிபதி, “பாதிக்கப்பட்ட சிறுமி யின் தந்தை காவலில் அடித்துத் தாக்கப் படும் போது போலீசாருடன் நீங்கள் தொடர் பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங் கள் இருக்கின்றன” என்றும் குற்றச் சாட்டை உறுதிப்படுத்தினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, 2019 ஜூலையில் தன் குடும்ப உறுப்பினர்க்ளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, லாரி ஒன்று காரில் மோதியது. இதில் அந்தப் பெண்ணின் தாயாரும், உறவினரும் பலியாகினர். சிறுமியும் படுகாயம் அடைந்தார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சைக்குப் பின்னரே உயிர் பிழைத்தார். தற்போதும், சிஆர்பிஎப் பாதுகாப்பில்தான் சிறுமி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;