tamilnadu

img

சபரிமலைக்காக சட்டம் இயற்ற முடியாது நாடாளுமன்றத்தில் அமைச்சர் கைவிரிப்பு

புதுதில்லி:
சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை கடந்து செல்ல சட்டம் கொண்டுவரும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் கேரள அரசுக்கு ஏற்பட்டது. தீர்ப்பு வந்த உடன் அதை வரவேற்ற ர்எஸ்எஸ்-பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினர் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தவும்  அரசியல் ஆதாயம் பெறவும் தங்களது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு வன்முறை போராட்டங்களை நடத்தின. மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக வும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பெண்களின் வழிபாட்டு உரிமை குறித்த பிரச்சனை க்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இரண்டாவது முறையாக அதிகாரத்துக்கு வந்துள்ள மோடி அரசு பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் இயற்றிட வேண்டும் என காங்கிரஸ்கூட்டணியில் வெற்றி பெற்ற புரட்சி சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரேம சந்திரன் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார். அந்தமசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதனன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினரி்ன் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்தினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்காமல்  கடக்க ஏதேனும் சட்டம் கொண்டுவருவது அரசின் பரிசீலனையில் உள்ளதா  என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அப்படி ஏதும் இல்லை என அரசின் நிலைபாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;