தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள இருதய அறிவியல் மையப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.