tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

1 எல்லையில், இந்தியா படைகளைக் குறைக்காது!

சீனா தனது எல்லைப்பகுதியில் 180 டிகிரி வரை சுழலும் இரண்டு அதிசக்தி வாய்ந்த கேமிராக்களை நிறுவி உள்ளது, சோலார் பேனல் மற்றும் காற்றா லை ஒன்றையும் கட்டி உள்ளது என்று உளவுத்துறை தெரிவித்துள்ள நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கப்போவதில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

2. ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’:  புதிய டெண்டர் வெளியீடு!

16 பெட்டிகள் கொண்ட 44 ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களைத் தயாரிப்ப தற்கு ஓராண்டுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டிருந்தது. இதில், இந்தியாவின் ‘பயோனீர் பில்’ நிறுவனத்துடன் இணைந்து சீனாவைச் சேர்ந்த ‘சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிடெட்’ நிறுவன மும் ஏலத்தில் பங்கேற்றிருந்தது. இந்நிலையில், அந்த டெண்டரையே முழுமையாக ரத்து செய்த ரயில்வே அமைச்சகம், உள்நாட்டுத் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் எதிர்ப்புப் புத்தகம் ‘புளூம்ஸ்பெரி’ வாபஸ்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தில்லியில் முஸ்லிம்கள் போராடி வந்த நிலையில், பாஜக உள்ளிட்ட சங்-பரிவார குண்டர்கள் திட்டமிட்டு ஒரு மோத லை அரங்கேற்றினர். இதில் 53 பேரின் உயிர் போனது. அவர்களில் பெரும்பாலா னோர் முஸ்லிம்கள். ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே பழிசுமத்தி, ‘தில்லி கலவரம் 2020’ என்ற பெய ரில், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் ‘புளூம்ஸ் பெரி பதிப்பகம்’ புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த புத்தகத்தைத் திரும்பப் பெற ‘புளூம்ஸ்பெரி பதிப்பகம்’ முடிவு செய்துள்ளது.

4 .கோயில் நிர்வாகம் கொரோனா  நிதி வழங்கியதற்கு எதிர்ப்பு!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநா யகர் கோயில் அறக்கட்டளையானது, மகாரா ஷ்டிரா அரசுக்கு கொரோனா நிவாரண நிதி யாக ரூ. 10 கோடி வழங்கி இருந்தது. இந்நிலை யில், அறக்கட்டளை நிர்வாகம் நிதி வழங்கி யதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்று, இடைக்காலத் தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

5.ஜிஎஸ்டி விலக்கு கோரும்  பெப்சி, கோலா நிறுவனங்கள்

‘பெப்சி இந்தியா’ மற்றும் ‘கோககோலா இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும், இந்திய பானங்கள் சங்கம் (ஐபிஏ), மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், கொரோனா  ஊரடங்கால் தங்களுக்கு ரூ.1200 கோடிக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஆல்கஹால் அல்லாத கார்பன் ஏற்றப்பட்ட பானங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

6 கணவனின் சம்பள விவரத்தை மனைவி கேட்கக் கூடாதாம்...

விவாகரத்து வழக்கு ஒன்றில், தனக்கு ஜீவனாம்ச தொகை சரியாக கிடைப்பதை உறுதிசெய்ய விரும்பிய பெண் ஒருவர், தன் கணவனின் உண்மையான மாதச் சம்பள  விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டுள்ளார். ஆனால், கணவனிடம் சம்பளம் தொடர்பான விவரங்களை கேட்பதற்கு மனைவிக்கு உரிமையில்லை என்று பதிலளித்து, மத்திய தகவல் ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக வருமான வரித்துறையும் இதே பதிலை வழங்கியுள்ளது.

7 .குஜராத்தில் விநியோகமாகும் ஹோமியோபதி மருந்து!

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளாக- ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருந்துகளை உட்கொண்டவர்களில் 99.69 சதவிகிதம் பேருக்கு, கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என கண்டறியப்பட்டு  உள்ளதாக குஜராத் அரசு கூறியுள்ளது. மேலும்,   மாநிலத்திலுள்ள 6.60 கோடி பேரில், 3.48 கோடி பேருக்கு  ‘ஆர்சனிகம் ஆல்பம்-30’ என்ற ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இம்மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் மாநில ஆயுஷ் துறை இயக்குநர் பாவ்னா படேல் தெரிவித்துள்ளார்.

8 சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட  என்சிஇஆர்டி புத்தகங்கள்!

உத்தரப் பிரதேசத்தில், சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் அம்மாநில சிறப்புப் பணிக்குழு, ராணுவ புலனாய்வு மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. இந்த புத்தகங்களின் மதிப்பு ரூ. 50 கோடி என்று கூறப்படுகிறது. முன்னதாக, போலீசார் வருவதை அறிந்ததும், மோஹம்பூரிலுள்ள சப்சி மண்டியின் தொழிற்சாலை ஒன்றில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.