tamilnadu

img

நிதி ஆயோக் ஆய்வு - பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா

பள்ளிக்கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்வதாக நிதி ஆயோக்கின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள பள்ளிக் கல்வியின் தரம் தொடர்பான அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாட்டிலேயே பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மாநிலத்தின் பள்ளிக் கல்வி தரம் 76.6 சதவிதமாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக 36.4 சதவிதத்தை உத்திரபிரதேச மாநிலம் பெற்றுள்ளது. இந்த அறிக்கையை 2016-17 ஆம் கல்வியாண்டிற்கான தரவுகளை வைத்து கணக்கிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
 

;