கோவை, ஜன. 1- கோவை மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீ ரென சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறி முதல் செய்யப்பட்டு, இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவை டவுன்ஹால் பகுதியில் முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பள்ளி களின் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் பெறு வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வியாழனன்று இரவு 8 மணி முதல் வெள்ளி யன்று காலை 7 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை துணை ஆணையர் கணேசன் தலை மையில், ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து கோவை ரேஸ் கோர்சில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் உஷாவின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 2 ஆயிரம் பணம் பறி முதல் செய்யப்பட்டது. இதையடுத்து நடை பெற்ற விசாரணையில் புத்தாண்டு பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தல் ஆகிய வற்றிற்காக கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் உஷா மற்றும் அவரது உதவியாளர் பாலன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.