புதுதில்லி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14 முதல்அக்டோபர் 1 வரை 18 நாட்கள் நடைபெறுகிறது.
\விடுமுறை இன்றி குறுகிய காலகூட்டத் தொடராக இது இருக்கும் என்று கூறியுள்ள மத்திய பாஜக அரசு, மசோதாக்களை மட்டும் அதிகமான எண்ணிக்கையில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 11 மசோதாக்கள், அவசர சட்டத்துக்கு மாற்றாககொண்டு வரப்படும் மசோதாக்கள் என்று கூறப்படுகிறது.கொரோனாவுக்கு எதிரான போரில்ஈடுபடும் சுகாதார மற்றும் மருத்துவபணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் வரை அபராதம்விதிப்பதற்கான மசோதா, கொரோனா தடுப்பு பணிகளுக்கான நிதிக்காக,ஓராண்டுக்கு எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவிகிதம் குறைப்பதற் கான மசோதா போன்றவை மாற்றுமசோதாக்களாக கொண்டுவரப் படுகின்றன. அதேபோல ஜம்மு - காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாஇந்த தொடரில் தாக்கல் செய்யப் படுகிறது. மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதற்குத் தடை விதிக்கும் மசோதாவும் இந்த தொடரில் அறிமுகம் செய்யப்படுகிறது.