tamilnadu

img

மத, இன வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு தாராள அனுமதி.... பாஜகவிற்கு ஆதரவாக முகநூல் நிறுவனம்....

புதுதில்லி:
இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாகமுகநூல் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியினரின் வெறுப்புப் பேச்சுக்களை முகநூல் நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட்’ (The Wall Street Journal) பத்திரிகை கூறியுள்ளது.அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னலில், “இந்திய அரசியலுடன் மோதும் முகநூல் நிறுவனத்தின் வெறுப்புப்பேச்சுகளுக்கு எதிரான விதிகள்” (Facebook’s Hate-Speech Rules Collide With Indian Politics) என்ற பெயரில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. 

அதில், “இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்புப் பிரச்சாரங்களை முகநூல் நிறுவனம் நீக்குவது இல்லை. பாஜகவினரின் பதிவுகளை கண்மூடித்தனமாக முகநூல் ஆதரிக்கிறது. பாஜக மட்டுமன்றிவேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் வெறுப்புப் பிரச்சாரங்களையும் முகநூல் அனுமதிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.இந்திய முகநூல் குழுவில் இருக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்; வன்முறையை தூண்டும் வகையில் பாஜக-வினர் செய்யும் போஸ்ட்களை வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்று ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’தெரிவித்துள்ளது.தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் பதிவுகளை சுட்டிக்காட்டியே ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ இக்குற்றச் சாட்டை எழுப்பியுள்ளது. ராஜா சிங்கின் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் பதிவுகள் குறித்து புகார் அளித்தும்கூட அவற்றை முகநூல் நீக்கியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களையும்; அதேபோல் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களையும் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ராஜா சிங் முகநூலில் வன்முறையைத் தூண்டியிருந்தார்.

ஆனால், இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது. இவரின் கணக்கை நீக்கக் கூடாது என்று இந்திய முகநூல் குழுவில் இருக்கும் அதிகாரிகள் சிலர் அழுத்தம் கொடுத்து, முகநூல் நிறுவன முடிவையே மாற்றி விட்டனர்.பாஜகவின் தில்லி தலைவர் கபில்மிஸ்ரா, கர்நாடக தலைவர் அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் மதவெறி பதிவுகளையும் முகநூல் நீக்குவது இல்லை.கபில் மிஸ்ரா-வின் போஸ்ட் தில்லிகலவரத்திற்கு வழி வகுத்தது என்று முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கே- ஒருமுறை பெயர் குறிப்பிட்டு பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் கபில்மிஸ்ரா பேசிய வீடியோ ஒன்றை முகநூல்நிறுவனம் நீக்கியது. ஆனால் மற்ற பதிவுகள் நீக்கப்படவில்லை. இவற்றுக்கெல்லாம், இந்திய முகநூல்குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த பெண் அதிகாரியான அன்கி தாஸ் என்பவரே முதன் மைக் காரணம் என்ற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளது. 

இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான முகநூல் நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநராக இருப்பவர் அன்கி தாஸ். முகநூலில்எந்தக் கருத்து இடம்பெற வேண்டுமென்று முடிவுசெய்யும் குழுவை இவர்தான் மேற் பார்வை செய்வதாக வால் ஸ்டிரீட் ஜர்னல்குறிப்பிட்டுள்ளது.அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டதை அடுத்து முகநூலிலும், பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அவற்றை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு அன்கி தாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வால் ஸ்டிரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது.

அன்கி தாஸின் விருப்பம் சார்ந்து மட்டுமே நிறுவனத்தின் வன்முறை - எதிர்ப்புவிதிமுறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்றாலும், இந்தியாவில் இருக்கும் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டால், தங்களது முகநூல் நிறுவனத்திற்கு சிக்கலாகும்; மிகப்பெரிய இந்தியசந்தையை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் முகநூல் நிறுவனமும், பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.அவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எதையும் நீக்குவது இல்லை என்று ‘வால் ஸ்டிரீட்ஜர்னல்’ தெரிவித்துள்ளது.இதனிடையே, ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்களை முகநூல் நிறுவனம் மறுத்துள்ளது. 

;