tamilnadu

img

கருத்து கேட்கும்  தேர்தல் ஆணையம்!

புதுதில்லி, ஜூலை 18- கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், வருகிற அக்டோ பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான வசதியை நீட்டிக்கப் போவதில்லை என தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு வெளியிட்டுள்ளது. இந் நிலையில், கொரோனா பாதிப்புகள் கார ணமாக, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் தொடர்பான ஆலோச னைகள் வரவேற்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை வரும் 31 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகிய வற்றை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.

;