india

img

வரலாறு காணாத கனமழையால் தில்லி விமான நிலையத்தில் வெள்ளம்....

புதுதில்லி:
தில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. தில்லியில் பருவமழை காலத்தில் இதுவரை1005.3 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பருவமழை காலத்தில்பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது. இது கடந்த 11 ஆண்டுகளில் தில்லியில் பெய்த அதிகபட்ச மழையாகவும் பதிவாகிஉள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக தில்லிஇந்திரா காந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

ஆரஞ்சு எச்சரிக்கை
இந்நிலையில், தில்லி பகுதிகளுக்கு வானிலை மையத்தால் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதுதில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை நீடிக்கும். குறிப்பாக தில்லியில் தேசிய தலைநகர் பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மனேசர், பரீசதாபாத், நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஒரு சில இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும்.தில்லியில் 2 செ.மீ. அளவில் லேசானதுமுதல் மிதமான மழையும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 3-5 செ.மீ. அளவில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.