tamilnadu

img

மறு உத்தரவு வரும் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க கூடாதாம்!

மறு உத்தரவு வரும் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க கூடாது  என உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல  இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் வழங்க வேண்டாம் என கூட்டுறவு வங்கிகளின் பதிவாளர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். பதிவாளரின் உத்தரவுக்கு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வருமானமின்றி தவிக்கும் சூழலில் நகைக்கடன் நிறுத்தம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அரசின் திடீர் நடவடிக்கையால் வாடிக்கையாளர்களிடம் பதில் கூற இயலாத நிலை உள்ளது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உறவை மேம்படுத்த சரியான தகவலை அரசு தெரிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 
 

;