tamilnadu

img

பொதுத்துறை எல்ஐசியை சூறையாட முடிவு

ரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை - கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு

புதுதில்லி,பிப்.1-  பொதுத்துறை எல்ஐசி பங்குகள் தனி யாருக்கு விற்கப்படும் என்றும் ரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை. கல்வித்துறையில் நேரடி அந்திய முதலீட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்தார்.  பட்ஜெட் தாக்கல் செய்து அவர் மேலும் பேசுகையில், நாட்டின் பொருளாதாரச் சீர் திருத்தங்களில் ஜிஎஸ்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி வரிமுறை படிப்படியாக நாட்டை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது. எதிர்காலத்தின் மீதான எதிர்பார்ப்பு, அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான சமூகம் ஆகிய 3 முக்கியக் குறிக்கோள்களை முன்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் செலவீனத் திறனை மேம்படுத்துவதாகும். பிர தமர் மோடியின் தலைமையின் கீழ் புத்துணர்ச்சி யுடன் செயல்படும் மத்திய அரசு மக்களுக்கு தேவையானவற்றை பணிவுடனும், அர்ப்பணிப்பு டனும் செய்ய கடமைப்பட்டுள்ளது. மத்திய அர சின் பொருளாதாரக் கொள்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறிக் கொண்டார்.

 சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சியாம்

மேலும் பேசுகையில், சிறுபான்மையின மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் கனவுகளை நிறை வேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாக போக்குவரத்துத்துறை மற்றும் தளவாடங்கள் துறை உள்ளிட்டவை மேம்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்பங்களில் 4 சதவீதம் சேமிப்பு உயர்ந்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் (எம்எஸ்எம்இ)தொழில் துறைகள் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. நுகர்வோருக்கு ஆண் டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஏற்படு கிறது. மத்திய அரசின் கடன் 2014 மார்ச் மாதத்தில் 52.2 சதவீதத்திலிருந்து 2019 மார்ச் மாதத்தில் 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் வாலிபர்களிடம் உற்சாகத்தையும், ஆற்றலையும் ஏற்படுத்தி வளர்ச்சிக்கு சாதக மாக அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறி முகப்படுத்தப்படும். கல்வித்துறைக்கு ரூ. 99,300 கோடியும், திறன் மேம்பாட்டுக்கு ரூ. 3,000 கோடியும் ஒதுக்க பரிசீலிக்கப்படுகிறது. தொழில்துறையின் வளர்ச்சிக்கு ரூ. 27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஜம்மு மற்றும் காஷ்மீர் வளர்ச்சிக்காக ரூ.30,757 கோடியும், லடாக் பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.5,958 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதிச்சநல்லூர், ராகிகரி, ஹஸ்தினாபூர், சிவசாகர், தோலவிரா ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தனியாருக்கு எல்ஐசி

15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்ப டையில் எல்.ஐ.சியில் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் .எல்.ஐ.சி.யில் மத்திய அரசின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். பங்கு களின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, வங்கித்துறை யில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும். இதேபோன்று, ஐடிபிஐ-யில் உள்ள அரசின் பங்குகளும் விற்கப் படும்.

வருமான வரி 

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள வர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20 சதவீத வருமான வரி 10 சதவீத மாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறு வோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30 சத வீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்படு கிறது. ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30 சதவீதமாகவே நீடிக்கும். வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித் துள்ளார்.


 

;