tamilnadu

img

வாடிக்கையாளர்களின் டெபாசிட் பாதுகாப்பாக உள்ளது.... லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகி தகவல்

புதுதில்லி:
நவம்பர் 18 அன்று காலை நிலவரப்படி  மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லெட்சுமி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. மேலும் லட்சுமி விலாஸ் பங்கு விலைபங்குச்சந்தையில் 20 சதவீதம் சரிந்திருந்தது. கடந்த4 ஆண்டுகளாக இந்த வங்கி  கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி லட்சுமி விலாஸ்வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்ககட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கிவாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து புதனன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும். டிசம்பர் 16 வரைஇந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் கூறுகையில், டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. அவர்கள் அச்சமடைய தேவையில்லை. 2020 ஆம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.  2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.  ஏடிஎம்
மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட் டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.