tamilnadu

img

கோவிட் 19: பாலக்காட்டில் குறைகிறது... 89 மாதிரிகளில் 62 இல் நோய் இல்லை

பாலக்காடு:
கோவிட்- 19 அறிகுறிகளைத் தொடர்ந்து தேசிய வைராலஜி ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்ட 89 நபர்களின் மாதிரிகளில் 62 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் கே.பிரீத்தா தெரிவித்தார்.

தற்போது மாவட்ட மருத்துவமனையில் 11 நபர்களும், ஒற்றப்பாலம் தாலுகா மருத்துவமனையில் 9 நபர்களும், மன்னார்காடு தாலுகா மருத்துவமனையில் இருவரும் கண்காணிப்பில் உள்ளனர். வீடுகளில் இருப்போர் உட்பட மொத்தம் 204 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 212 நபர்கள் கண்காணிப்பு காலத்தை கடந்துள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு 731 அழைப்புகள் வந்துள்ளன. நோய் அறிகுறி உள்ளவர்கள் கட்டாயமாக சுகாதார ஊழியர்களை தொடர்பு கொண்டு தனிமைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் தாக்குதல் அதிகம் உள்ள சீனா, ஹாங்காங், தாய்லாந்த், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், நேப்பாளம், இந்தோனேசியா, மலேசியா, இரான், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் மாநில கோவிட் 19 இலவச அழைப்பு மையங்களை 0471-2309250, 0471-2309251, 0471-230925 ஆகிய எண்களில் அல்லது மாவட்ட மருத்துவ அலுவலகத்தை 0491 2505264, 2505189, 2505303 ஆகிய எண்களில் கட்டாயம் தொடர்பு கொள்ள வேண்டும். கேரளத்தில் கோவிட்- 19 குறித்த அச்சம் விலகாத நிலையில் மாவட்டத்தில் அத்தகைய அச்சம் இல்லை எனவும் மருத்து அலுவலர் தெரிவித்தார்.

;