tamilnadu

img

தில்லி இடுகாடுகளில் குவியும் பிணங்கள்!

புதுதில்லி:
கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, தில்லியில் அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு, அங்குள்ள தகன மையங்களில் (Cremation Ground) பிணங்கள் குவிந்து வருகின்றன.குறிப்பாக, ‘பஞ்சாபி பாக்’ தகன மையத்தில் குவிந்த பிணங்களை, நிகாம்போத் காட் தகன மையத்திற்கு திருப்பி அனுப்பும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரி பூபேந்தர் குப்தா கூறுகையில், “பஞ்சாபி பாக் தகன மையத்தில் 65 உடல்கள் ஏற்கெனவே இருந்தன. வியாழனன்று மேலும் 75 உடல்கள் வந்தன. இறந்தவர்களின் உறவினர்களை காத்திருக்க வைக்கக்கூடாது என்பதால், அந்த உடல்கள் நிகாம்போத் தகன மையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று 48 உடல்கள், செவ்வாய்க்கிழமை 65 உடல்கள்,புதன்கிழமை 65 உடல்கள் பஞ்சாபி பாக்மையத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தில்லியிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையான லோக்நாயக் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை நான்கு மணி வரை மட்டும் 34 உடல்கள் உடற்கூராய்விற்காக வந்தன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடும் திணறிப் போனார்கள்.உடற்கூராய்வு முடிந்த பின் சில உடல்கள் நிகாம்த் காட், பஞ்ச்குயன் சாலைமற்றும் மங்கோல்பூரியில் உள்ள தகன மையங்களுக்கு அனுப்பப்பட்டன. நான்குஉடல்கள் ஐ.டி.ஓ.-வில் உள்ள அடக்க ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது,23 உடல்கள் சவக்கிடங்கில் உள்ளன என்றுமருத்துவமனை சவக்கிடங்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கொரோனாவில் இறந்தவர்களில் நாளொன்றுக்கு 95 பேரின் உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். தற்போதுஇதன் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. இதனாலேயே பஞ்சாபி பாக்தகன மையத்தில் இடமில்லாததால், நிகாம்போத் காட் தகன மையத்திற்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தில்லியில் 13 தகன மையங்கள், நான்கு கல்லறைகள் மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில், ஆறு தகன மையங்கள், நான்கு அடக் கஸ்தலம், ஒரு கல்லறை ஆகியவை கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தில்லியில் மட்டும் கொரோனாவால் 1,214 பேர் உயிரிழந்துள்ளனர்.

;