தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று புதிதாக 1458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30152 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1146பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 1423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 19பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 633 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம 16395 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 13503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.