tamilnadu

img

புதுச்சேரியில் புதிதாக 29 பேருக்கு கொரோனா

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஞாயிறன்று (ஜூன் 28) மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 648 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில்  புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்றகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் மூலம் இறந்தவர்கள் எண் ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

‘‘புதுச்சேரியில் சனிக்கிழமை  512 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 20 பேர் கதிர்காமம் இந்திரா காந்திஅரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர்ஜிப்மரிலும், ஒருவர் ஏனாமிலும், 2 பேர்பிற பகுதியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோரிமேடு காவலர் குடியிருப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற 61 வயது காவலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். சனிக்கிழமை  மாலைசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் 648 பேர்பாதிக் கப்பட்டள்ளனர். தற்போது கதிர் காமம் அரசு மருத்துவகல்லூரியில் 209 பேர், ஜிப்மரில் 97 பேர், கோவிட் கேர் சென்டரில் 37 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் 4 பேர் என மொத்தம் 385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஞாயிறன்று  கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 22 பேர், ஜிப்மரில் 8 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 31 பேர் ‘டிஸ் சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 252 பேர் அதிகரித்துள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 225 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 380 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது. 191 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே சட்டப்பேரவை முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3வதுநாளாக புதுச்சேரி சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது.

;