tamilnadu

img

புதுச்சேரியை அச்சுறுத்தும் கொரோனா

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வருவது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது. இதில் 276 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 176 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் ஜூன் 23 முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. வழிபாட்டுத்தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி நடத்திய ஆலோ
சனைக்குப் பிறகு புதிய கட்டுப் பாடுகள்  அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டன.

அதன்படி பெரிய மார்க்கெட் டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன.  நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, புஸ்சி வீதி, மறைமலை அடிகள்சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள், மார்க்கெட்டுகள் ஆகியவை மதியம் 2 மணி வரை செயல்பட் டன. அதன்பிறகு 3 மணி வரை கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் அவை முழுமையாக மூடப்பட்டன. நடைபயிற்சி மேற் கொள்வதற்காக கடற்கரை சாலைக்கு ஒரு சிலர் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர். பொழுது போக்குவதற்காக பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகிய இடங் களுக்கு மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

இதனால் எப்போதும் பரபரப் பாக இயங்கி வந்த கடற்கரை, மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பூங்காக்கள் வெறிச்சோடி காணப் பட்டன. பால் நிலையங்கள் மாலை 6 மணி வரை செயல்பட் டன. எந்த தடையும் இல்லாததால் மருந்துக்கடைகள் வழக்கம் போல் இயங்கின. நகரின் பல் வேறு பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,” நோய்த்தொற்று கண்டறியும் வகையில் புதுச்சேரி கிராமப் புறங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா தோற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது”என்றார்.கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எந்தவித  அறிகுறியும் இல்லாமல் கொரோனா சிகிச்சை பெற்று வரும்  தலா 50 பேர் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியிலும்,  அதேபோல் 25 பேர் புதுச்சேரி அரசு பல் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுமக்கள் முகக் கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

;