சென்னை:
தமிழகத்தை உலுக்கும் கொரோனா, மீண்டும் புதிய உச் சத்தை எட்டி உள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் சில நாட்களாக கொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் அடுத் தடுத்து இறக்கின்றனர்.சென்னையின் 15 மண்டலங் களிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் மட்டும் இது 5 ஆயிரம் பேர் பாதித்துள்ளனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில், சனிக்கிழமை ஜூன் 13 ஒரே நாளில் 30 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது. இவர்களில், சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.இதேபோல, 27 வயது மற்றும் 29 வயது இளைஞர்கள் இருவர் உள்பட 18 பேர், அரசு மருத்துவமனைகளில் பலியாயினர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 400-யை நெருங்கி உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர், கேஎம்சியில் 3 பேர் என 18 பேர் உயிரிழந்தனர்.கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை மாநகராட்சியில் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மட்டுமன்றி உயிர் பலியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாநகராட்சியின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கின்றன.கடந்த வாரத்தை காட்டிலும் வைரஸ் தொற்றின் வேகம் தற்போது அதிகரித்து அசுர வேகம் எடுத்து இருக்கிறது. வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு என்ற நிலை மாறிவருகிறது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் செயல்பாடு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக மாறிவிட்டது. வைரஸ் தொற்று பாதித்த தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பதை நிறுத்தி விட்டனர். பரிசோதனையும் செய்வது இல்லை.
வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ள களப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை.வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்ட நபர்களை அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் வைப்பதற்கு மாறாக தற்போது அவர்களது இல்லங்களிலேயே தனிமைப்படுத்தி வருகிறார்கள்.மேலும், வைரஸ் பாதித்த நபர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்றவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே தடுப்புகள் அமைத்தனர். அந்தப் பணியையும் முறையாக செய்வதில்லை.தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு இல்லங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. கணக் கில் எடுத்துக் கொள்ளவில்லை.மாநகராட்சி அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச் சத்தை ஏற்படுத்தி வருவதால் சுகாதாரத் துறை அமைச்சரும் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சுகாதாரத்துறை செயலாளரும் கவனம் செலுத்துவார்களா?
===நமது நிருபர்===