tamilnadu

img

கொரோனாவுக்கு தொழிற்பாதுகாப்பு படைவீரர் பலி

புதுதில்லி ஜூன் 21-  கொரோனா தொற்று காரணமாக 41 வயதான மத்திய தொழில்துறை பாது காப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.  மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை வீரரான  உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் நகரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஜிதேந்தர் குமார் ஜூன் 10-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார் ஜிதேந்தர் குமார் தில்லியில் கொரோனா பரவலைத் தொடர்ந்து அங்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பிரி விற்கு மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வந்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்  (ஐடிபிபி), மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை (சிஐ எஸ்எஃப்) மற்றும் சாஷஸ் திரா ஆகிய ஐந்து மத்திய துணை ராணுவப் படைகளில் தொற்றுநோயால் பாதிக்கப் பட்டு இறந்தவர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என சாஸ்திரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) தெரிவித்துள்ளார்.