tamilnadu

img

‘கொரோனா கொள்ளை’

புதுதில்லி, ஏப்.27- கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் நிலையைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடமிருந்து இந்தியா கொள் முதல் செய்தது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா பேரழிவை எதிர்த்துப் போரா டும்போது கூட, சிலர் நியாயமற்ற லாபம் ஈட்டு வதைத் தவறவிடுவதில்லை. இந்த ஊழல் மன நிலையைப் பற்றி வெட்கம், வெறுப்பு தான் ஏற்படுகிறது. இந்த லாபக்காரர்கள் மீது விரை வில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும். நாம் அவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

எந்தவொரு மனிதனும் தனது மில்லியன் கணக்கான சகோதர, சகோதரிகள் அளவிட முடியாத துன்பத்திலிருக்கும் போது லாபம் ஈட்ட முயற்சிப்பான் என்பது நம்பிக்கைக்கும் புரி தலுக்கும் அப்பாற்பட்டது. இந்த மோசடி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு அவமானம். ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்துவ தற்கு பிரதமர் விரைவாக செயல்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஐ.சி.எம்.ஆருக்கு விற்கப்படும் கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளில் 145 சதவீதம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது என பிசினஸ் டுடே தெரிவித்துள்ளது.

;