tamilnadu

img

மகாராஷ்டிராவிற்குள் சிபிஐ நுழைய அனுமதி ரத்து...

மும்பை;
மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ-க்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி திரும்பப்பெறுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த டிஆர்பி  மோசடி தொடர்பான வழக்கை உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால்வழக்கை திடீரென உத்தரப்பிரதேசகாவல்துறை சிபிஐக்கு கொடுத்து ள்ளது.  இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிபிஐ-யின் தன்னிச்சை விசாரணைக்கு  உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார்.இந்த அறிவிப்பால் இனி சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்தவழக்குகள் தொடர்பாகவும் விசார ணை மேற்கொள்ள முடியாது.ஏற்கனவே ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்கள் சிபிஐ-க்கு வழங்கிவந்த பொது இசைவு அனுமதியை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.