பெங்களுரூ:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்,`காவேரி கூக்குரல்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கி, நடத்தி வருகின்றார். இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாதன் என்பவர், ‘ ஜக்கிவாசுதேவ், மரம் நடுவதற்கு மக்களிடம் நன்கொடை வாங்குவதை நிறுத்த வேண்டும்’ என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.