tamilnadu

img

இடைத்தேர்தல் - திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

புதுச்சேரி, செப்.24- விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுவை - காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப் பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரி யில் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் கூட்டத்திற்கு தலை மை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் கே. வரதராசன்,  டி.கே.ரங்க ராஜன் எம்.பி., உ.வாசுகி,  பி.சம்பத், அ. சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநி லக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர்  தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. மத்தி யில் இரண்டாவது முறையாக ஆட்சி க்கு வந்துள்ள பாஜக தலைமை யிலான கூட்டணி அரசு  அரசியல் சட்ட நெறிகளின் மீது  தொடர்தாக்கு தல் நடத்தி வருகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், மனித உரிமைகள் என அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. கார்  கம்பெனி முதல் பிஸ்கட் கம்பெனி வரை மூடப்படுகின்றன. லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ள னர்.  பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும்  தொழி லாளர்களுக்கு நிவாரணம் அளிப்ப தற்கு பதிலாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கருணை மழை பொழிகிறது மோடி அரசு. மத்தியில் உள்ள பாஜக கூட் டணி அரசில் பினாமி போலவே தமிழக அதிமுக அரசு மாறிவிட்டது. மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் எவ் வித எதிர்ப்பும் இன்றி உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

நீட் தேர்வு முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்க ளின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நடைபெறும் இடைத் தேர்தலிலும் மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. விக்கிர வாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது அவ சியமாகும். எனவே இந்த  தொகுதி களில் திமுக கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

கேரளா, தமிழக முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேற்பு

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையிலான  பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் குறித்து இருமாநில முதல்வர்களும் செப்டம்பர்- 25ஆம்தேதி சந்தித்து பேசவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வரவேற்கிறது. தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பல்வேறு  ஒப்பந்தங்கள் கேரள மாநிலத்துடன் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சந்திப்பின் மூலம் இருமாநில உறவுகள் பலப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர் மற்றும் பாசன பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

;