tamilnadu

img

சீன ஜனாதிபதிக்கு நினைவு பரிசாக நாச்சியார்கோயில் குத்துவிளக்கு

கும்பகோணம், அக்.12- தமிழகத்திற்கு வருகை தந்த சீன அதிபருக்கு பாரத பிரதமரால் வழங்கப் பட்ட நாச்சியார்கோவில் குத்துவிளக்கு என்பதால் நாச்சியார்கோவில் குத்து விளக்கு தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிரா மத்தில் சுமார் 500 குடும்பங்கள் குத்து விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றனர். உலகம் முழுவதும் இந்த குத்து விளக்கை வாங்கி சென்று வரு கின்றனர் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட நாச்சியார்கோயில் குத்து விளக்கிற்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் 1974-ல் நாச்சியார் கோவிலில் மாவட்ட வேலைவாய்ப்பு மையமாக செயல்பட்ட குத்துவிளக்கு உற்பத்தி நிலையத்தை பூம்புகார் கைத்திறன் மேம்பாட்டுக் கழகமாக அரசு பொது நிறுவனமாக அறிவித்தது.

அன்று முதல் கோயில் விளக்குகள், பூஜை பொருட்கள், வெண்கல ஆலய மணிகள், பிரசித்திப் பெற்ற கோயில் அலங்காரப் பொருட்கள் என இப்பகுதியில் வாழும் குத்துவிளக்கு தொழிலாளர்களை வைத்து பூம்புகார் நிறுவனம் குத்துவிளக்கு உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்நிலையில் சென்னைக்கு வருகை தந்து இரண்டு நாள் சுற்றுப் பய ணம் மேற்கொண்ட சீன ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரி சாக நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சை கலைத்தட்டு ஆகியவற்றை பரிசாக வழங்கினார். பரிசாக வழங்கிய குத்துவிளக்கு நாச்சியார்கோவில் பூம்புகார் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பி டத்தக்கது. அந்த விளக்கிற்கு அன்ன அஷ்டோத்திரம் என்று பெயர் சுமார் 15 கிலோ எடையுள்ள நான்கு அடுக்கு களாக 108 மூக்கு என்று சொல்லக் கூடிய தீபம் ஏற்றும் வகையில் 22 அன்னபட்சி பொருத்திய கலைநயத்து டன் செய்யப்பட்டதாகும்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் பூம்புகார் கண்காணிப்பாளர் அரு ணாச்சலம் கூறும்பொழுது, உலக பிர சித்தி பெற்ற குத்துவிளக்கு நாச்சியார் கோயில் பூம்புகார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சீன அதிபருக்கு எங்கள் நிலையத்தில் செய்த அஷ்டோத்திர அன்ன விளக்கு பிரதமர் மோடி வழங்கியிருப்பது எங்க ளுக்கு மகிழ்ச்சி தருகிறது நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உற்பத்தி தொழிலாளர்கள் மேலும் உற்சாகத்து டன் இருந்து வருகிறார்கள் என்று தெரி வித்தார். தொழிலாளர்கள் கூறும் பொழுது, இது போன்ற கலைநயத்துடன் ஏராள மான கைவினைப் பொருட்களும் செய்து வருகிறோம். எங்களுக்கு இன் னமும் மத்திய, மாநில அரசுகள் ஊக்க மளித்து நிதி நிலை தட்டுப்பாடின்றி வழங்கி பொருளாதாரத்தில் பின் தங்கிய குத்துவிளக்கு தொழிலா ளர்களுக்கு உதவி செய்தால் இன்னும் சிறப்பாக செய்து நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என் றும் தெரிவித்தனர்.

;