facebook-round

img

சீன அதிபர் தோழர் ஜீ ஜின்பிங் அவர்களுக்கு ஒரு சூடான " சைனா டீ "

பிரிட்டன் - சீனாவிற்கு இடையிலான ஓப்பியம் யுத்தம் முடிவிற்கு வந்த பிறகு, சீனாவில் பிடிக்கப்பட்ட கைதிகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு நீலகிரி மாவட்டம் நடுவட்டம் என்ற கிராமத்தில்ஒரு சிறையை அமைத்து அதில் அடைத்து வைத்தார்கள்... அந்த இடம் "ஜெயில்மட்டம்" என அழைக்கப்படுவதோடு, இன்றைக்கும் அந்த சிறையை சுற்றுலாப்பயணிகள் பார்க்க ஏற்பாடு உண்டு.... 1830 ல் அந்த கைதிகளை கொண்டே சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலையை முதன்முதலாகப் பயிரிட்டார்கள்... நீலகிரியில் முதல் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடத்தின் பெயர் "தியாஷோலா""... 'தியா' என்றால் சீன மொழியில் தேநீர் என்று அர்த்தம்.. அந்த இடம் இன்று தாய்சோலா எனும் பெயரில் பெரிய தேயிலை தோட்ட நிறுவனமாக வளர்ந்துள்ளதோடு, நீலகிரி மாவட்டத்தில் இன்றைக்கு இரண்டு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்படுகிறது... உழைப்பாளி மக்களின் உற்சாக பானமான தேயிலையை இந்தியாவுக்கு அனுப்பிய சீனாவிற்கு நன்றி.... இன்றைக்கு இந்தியாவிற்கு வரும் சீன அதிபருக்கு சூடாக ஒரு " சைனா டீ " அளித்து வரவேற்போம்...

-Badri Narayanan