tamilnadu

img

பாஜக அமைச்சர் வி.கே.சிங் சொல்கிறார் இந்திய ராணுவத்தை மோடி ராணுவம் என்பவர்கள் துரோகிகள்

புதுதில்லி, ஏப். 4 - உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை, மோடியின் சேனை என்று கூறியது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், மத்தியபாஜக அமைச்சரான வி.கே. சிங்கும்இவ்விஷயத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.“பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் அனைவரும் ராணுவம் என்றுதங்களை அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் எந்த ராணுவத்தைக் குறிப்பிடுகின்றனர். இந்திய ராணுவத்தையா, கட்சியின் தொண்டர் படையையா? இது எந்தப் பொருளில் பேசப்படுகிறது என்பது தெரியவில்லை.ஒருவேளை யாரேனும் இந்திய ராணுவம் மோடியின் ராணுவம் என்றுகூறினால் அது தவறு மட்டுமல்ல,அப்படிப் பேசுபவர் துரோகியும்கூட. இந்திய ராணுவம், இந்தியாவுக்கே சொந்தமானது. எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல”என்று வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.வி.கே. சிங்கிற்கு ஆதரவு கேட்டுச்சென்ற இடத்தில்தான், இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று ஆதித்யநாத் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

;