tamilnadu

img

‘பதஞ்சலி’ விவகாரத்தில் தப்பிக்க முயலும் பாஜக அரசு...

புதுதில்லி:
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், உலகமே திணறிவரும் நிலையில், 3 முதல் 7 நாட்களில் கொரோனாவை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக சாமியார் ராம்தேவ் அறிவித்தார்.‘கொரோனில் அண்ட் ஸ்வாசரி’ (Coronil & Swasari) என்ற இந்த மருந்து, ரூ. 545 என்ற விலையில் ‘பதஞ்சலி’ ஷோரூம்களில் கிடைக்கும்என்றும் கூறினார்.

இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், சோதனையில் நிரூபிக்கப்படாத வரை, பதஞ்சலி தனது மருந்தை விளம்பரம் செய்யக் கூடாது என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் தடை விதித்தது. இதனிடையே, உத்தரகண்ட் மாநிலஆயுர்வேத நிறுவனம் எந்த அடிப்படையில் பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கியது? என்று கேள்விகள் எழவே, அதற்கு உத்தரகண்ட் அரசு ஒருவிளக்கம் அளித்திருக்கிறது. 

அதில், பதஞ்சலியின் ‘கொரோனில்மருந்து’ என்பது சளி, காய்ச்சல் மற்றும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்ற அடிப்படையில் மட் டும்தான் உத்தரகண்ட் ஆயுஷ் துறை விற்பனைக்கான உரிமம் வழங்கியது என்று சமாளித்துள்ளது.மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்தக் கூடிய மருந்துஎன்ற வகையில் நாங்கள் உரிமம்வழங்கவில்லை என்று கூறியுள்ள உத்தரகண்ட் அரசு, “கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்தது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புவோம்” என்றும் நாடகம் போட்டுள்ளது.

;