கொழும்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷெஹன் மதுஷங்கா தனது முதல் போட்டியிலேயே (ஒருநாள் போட்டி - வங்கதேசம்) ஹாட்ரிக் சாதனை படைத்தவர்.வலதுகை பந்துவீச்சாளரான இவர் அதிரடி மனநிலை கொண்ட வீரர் ஆவர்.
இந்நிலையில், ஞாயிறன்று 2 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வைத்திருந்ததாக ஷெஹன் மதுஷங்காவை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப்பின் திங்களன்று வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி 2 வாரங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 25 வயதாகும் இளம் வீரரான ஷெஹன் மதுஷங்கா மீது போதைப் பொருள் குற்றச்சாட்டப்பட்டுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து அவரை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.