tamilnadu

img

வாட்ஸ் ஆப்-பில் ஆபாச வீடியோ அனுப்பிய பாஜக துணைமுதல்வர்... ஏதேதோ காரணங்களைக் கூறி தப்பிக்க முயற்சி

பனாஜி:
பாஜக-வைச் சேர்ந்த கோவா துணைமுதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் வாட்ஸ்-ஆப்பில் ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக புகார் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தனது போன் ‘ஹேக்’ செய்யப்பட்டதாக கூறி சந்திரகாந்த் கவ்லேகர் தற்போதும் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பிரமோத் சாவந் இருக்கிறார். துணை முதல்வராகவும், மாநில வேளாண்துறை அமைச்சராகவும் சந்திரகாந்த் கவ்லேகர் பதவி வகிக்கிறார்.  

இந்நிலையில், செவ்வா யன்று அதிகாலை 1.20 மணிக்கு கவ்லேகரின் போனில் இருந்து,‘வில்லேஜஸ் ஆப் கோவா’ (VILLAGES OF GOA)  என்ற வாட்ஸ் ஆப்  குரூப்பில் ஆபாசவீடியோ ஒன்று  பகிரப்பட்டுள் ளது. இதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. ஒரு துணைமுதல்வர் செய்கிற காரியமா இது? என கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது.இதுதொடர்பாக விசாரணை நடத்த கோவா முன்னணிகட்சியின் மகளிர் பிரிவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில்,  துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் மீது எப்.ஐ.ஆர் பதிவு  செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள னர். இந்நிலையில், ஆபாச வீடியோ பகிரப்பட்ட அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில், தான் இருப்ப தை ஒப்புக் கொண்டுள்ள சந்திரகாந்த் கவ்லேகர், ஆனால், இந்தவீடியோவை தான் பகிர வில்லை என்று கூறியுள்ளார்.ஆபாச வீடியோ அனுப்பப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஹேக்கர்கள் இருப்பதாக வும், “அந்த வீடியோ ஷேர் ஆன நேரத்தில்- தான், செல்போனை பயன்படுத்தவே இல்லை, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றும் கவ்லேகர் தப்பிக்க முயற்சியில் இறங்கியுள்ளார். அவரும் தன்பங்கிற்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.