tamilnadu

img

இ-சிகரெட்டுகளை தடை செய்க!

புதுதில்லி, ஜூலை 6- மிகவும் கேடுபயக்கக்கூடிய இ-சிகரெட்டுகளைத் தடை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே. சோமபிரசாத் வலி யுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் கே. சோமபிரசாத் பேசிய தாவது: பொது சுகாதாரத்திற்கு மிகவும் கேடு பயக்கக்கூடிய இ-சிகரெட்டு கள் குறித்து இந்த அவையின் கவ னத்திற்கும், அரசாங்கத்தின் கவ னத்திற்கும் கொண்டுவர விரும்புகி றேன்.  ‘புகை பிடிப்பது உடல்நலத்தி ற்குக் கேடு’ என்பது புகழ்பெற்ற வாசகமாக மாறிவிட்டது. புகை யிலை நுகர்வு, குறிப்பாக சிகரெட் புகைத்தல், சமீப ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. புகைப்பிடித்தலுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து மக்களிடம் சிகரெட்டிற்கு எதிராக பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.