tamilnadu

முஸ்லிம்களை பூதாகரமாக சித்தரிப்பது சரியல்ல...

இந்தியாவில், ஆளும் கட்சியின் செயல்பாடு மக்களில் ஒரு பிரிவினரை பூதாகரமாகச் சித்தரிப்பதாக, பொருளாதாரத்திற்கான ‘நோபல்’ பரிசு பெற்ற, அமெரிக்கவாழ் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி விமர்சித்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அபிஜித் பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். 

அப்போது, “இந்தியாவின் ஆளும் கட்சியானது, முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் பற்றிபிரச்சாரம் செய்து வருகிறது; அந்த பிரச்சாரங்கள் மக்களில் ஒரு பிரிவினரை மட்டும் பூதாகரமாகச் சித்தரிப்பதாக உள்ளன” என்று கூறியிருப்பதுடன், “மக்களிடம் மதத்தின் பெயரால்விரோதம் காட்டக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும், இத்தகைய சித்தரிப்புகளில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என நிராகரித்துள்ள அவர், “இந்தியாவில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என உண்மையாகவே யாரும் பயப்படுவதாகத் தோன்றவில்லை; இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம்ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுவது அடிப்படை ஆதாரமற்றது”என்று கூறியுள்ளார்.இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலுமே சிறுபான்மை மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்றுகூறியுள்ள அபிஜித் பானர்ஜி, “அரசியலில் பிரிவினையற்ற அணுகுமுறை தேவை” என்றுகுறிப்பிட்டுள்ளார். “அரசியலில் நம் நாட்டின் இப்போதைய நிலை, சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வந்திருக்கிறது” எனவும் “யாரும் நம்மை எதிரிகளாகக் கருத இடமளிக்கக்கூடாது. சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படும் எவருடனும் இணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

;