tamilnadu

img

இடஒதுக்கீடு அடிப்படை உரிமையே உரிமையல்ல என்று கூறுவது சரியல்ல

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அடிப்படையான உரிமையல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்து - சட்டப்படி சரியானதல்ல என்று பல்வேறு சட்ட ஆதாரங்களையும், தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கருத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது இட ஒதுக்கீடு - சமூகநீதி என்பது அடிப்படை உரிமைதான் என்பதை நிரூபிக்கும் ஆவணமாகும்.‘‘The Fundamental rights are basic rights and include basic freedoms guaranteed to the individual. Articles 12 to 35 deal with the Fundamental Rights. The Fundamental Rights are freedoms guaranteed but these freedoms are not absolute, they are Judicially enforceable.‘‘....The Fundamental Rights என்பதற்கும், Legal Rights என்பதற்கும் - அதாவது அடிப்படை ஜீவாதார உரிமை என்பதற்கும், சட்ட உரிமை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்,சட்ட உரிமை (Legal Rights) என்பது நீதிமன்றங்களால் பாதுகாக்கப்படுவது. ஆனால், ஜீவாதார - அடிப்படை உரிமைகளோ, அரசமைப்புச் சட்டத்தாலேயே பாதுகாக்கப்படக் கூடியது.அத்தகைய அடிப்படை உரிமைகள் சமத்துவத்திற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திர உரிமை, கலாச்சார மற்றும் கல்விக்கான உரிமைகள், அரசமைப்புச் சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக நிவாரணம் கோரும் உரிமை என மேற்காட்டியவைகளில் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமை என்பதன் கீழ்தான் இட ஒதுக்கீடு, சமூகநீதி பாதுகாக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமைதான் இதை 9 நீதிபதிகள் கொண்ட இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளும், ஒட்டுமொத்த பெரும்பான்மை தீர்ப்பிலும் சரி, தனித்தனியே எழுதப்பட்ட தீர்ப்புகளிலும் சரி, இதனை வலியுறுத்தத் தவறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதும், இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமைதான் என்பதைப் பறைசாற்றுகிறது.எனவே, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவது அரசமைப்புச் சட்டப்படியும், அரசமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் - தந்தைகள் கருத்துப்படியும், 9 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கான - மண்டல் வழக்குத் தீர்ப்புப்படியும் - அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான வியாக்கியான கருத்து ஆகும்.என்றாலும், மக்கள் மன்றத்தின் இடையறாத போராட்டங்களும், நியாயங்களும், கண் திறக்க மறுப்பவர்களுடைய கண்களையும் திறக்க வைக்கும் என்பது உறுதி, உறுதியிலும் உறுதிஇவ்வாறு அவர் கூறியுள்ளார்.