tamilnadu

img

அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாம் - மேற்குவங்க ஆளுநரின் புதிய கண்டுபிடிப்பு

மகாபாரதப் போரில் அர்ஜூனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்ததாக மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் அறிவியலுக்கு புறம்பாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில், பிர்லா தொழில்நுட்ப காட்சியகத்தில் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், "விமானம் 1910-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நம் தேசத்தின் இதிகாசங்களை ஆழ்ந்து படித்தால் ராமாயண காலத்திலேயே ஆகாய விமானங்களுக்கு நிகரான வாகனங்கள் இருந்தன என்பது புரியும். அதேபோல் மகாபாரதத்தில் அர்ஜூனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது. உலக நாடுகள் இந்தியாவைப் புறக்கணித்துவிட முடியாது" என்றார்.
அவரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜகவில் பிரதமர் மோடி தொடங்கி பல அமைச்சர்கள் அவ்வப்போது அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த நவம்பர் 2019-ல் பசும்பாலில் தங்கம் இருக்கிறது எனப் பேசியிருந்தார். 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சூரியனில் ஓம் என்று சத்தம் கேட்கிறது என்று பொய்யான தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தற்போது பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் அரசியல் பிரமுகர் போல் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
 

;