tamilnadu

img

மேலும் முசாபர் துயரம் வேண்டாம் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன முழக்கம்

புதுதில்லி, ஜூலை 11- “மேலும் முசாபர்பூர் துயரம் வேண்டாம்!”, “சத்துணவுக் குறைவுக்கு முடிவு கட்டுக”, “ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை  வலுப்படுத்துக” என வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் கோரிக்கை தினம், ஜூலை 10 அன்று நாடு முழுதும் எழுச்சியுடன் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களும் -  உதவியாளர்களும் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்தபோதிலும் பல லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களும் – உதவியாளர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற் றார்கள். இவ்வாறு கோரிக்கை தினம் அனுசரித்திட அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் – உதவியாளர்கள் சம்மேளனம் அறைகூவல் விடுத்திருந்தது. பீகார் மாநிலத்தில் ஊட்டச் சத்துக்குறைவு காரணமாக 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ள பின்னணியில் இவ்வாறு ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கார், குஜராத்,  ஹரி யானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்,  கர்நாடகம், கேரளம், மத்தியப் பிர தேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், புதுச்சேரி, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, திரிபுரா,  உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம்  மேற்கு வங்கம் முதலான மாநி லங்களின் மாவட்டத் தலைநக ரங்களில் இந்த கோரிக்கை தின ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

உறுதிமொழிக்கு துரோகம்
மோடி-2 அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மாபெரும் இயக்க மாக இது அமைந்தது. ஊட்டச்சத் தின்மையாலும், பீகார் உட்பட பல மாநிலங்களில் அங்கன் வாடி ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டங் களில் ஊழியர்கள் கண்டன முழக்கமிட்டனர். தேர்தலுக்கு முன்பு ஆர்  எஸ்எஸ்/பாஜக-வினர் அங்கன் வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்கு றுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், வழக்கம் போலவே தங்கள் உறுதி மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டனர். இதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தின்போது ஊழி யர்கள் கண்டன முழக்கங்கள் மேற்கொண்டனர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்தில் பல மாநிலங் களில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு எதி ராகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

கோரிக்கை முழக்கங்கள்
· ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை நிரந்தரப்படுத்து, இத்திட்டத்திற் கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதி கரித்திடு. · 45ஆவது சர்வதேச தொழி லாளர் மாநாடு பரிந்துரைத்த திற்கிணங்க, அங்கன்வாடி ஊழி யர்களுக்கு-உதவியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும், ஓய்வூதியத்தையும் வழங்கிடு. · ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை தனியாரிடம் எந்த வடிவத்திலும் தாரைவார்த்திடாதே, கார்ப்பரேட் நிறுவனங்களிடமோ அல்லது வே றெந்த அரசு சாரா நிறுவனத்திடமோ அளித்திடாதே. · ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை வலுப்படுத்திடு, அங்கன்வாடி மையங்களை அங்கன்வாடி-குழந்தைகள் காப்பகங்களாக (கிரீச்சுகளாக) மாற்றியமைத்திடு, ஊட்டச்சத்து வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திடு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்குப் பள்ளிக்கு முன் தேவையான கல்வியை அளிப்பதற்கான வசதிகளையும் செய்துகொடு எனக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங் கள் இட்டார்கள். ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை  வலுப்படுத்துவதற்கும், ஊழியர் களை நிரந்தரப்படுத்துதல், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறக் கூடிய விதத்திலும், எதிர்கால நட வடிக்கைகளைத் திட்டமிடுவ தற்காக, வரும் ஜூலை 25-26 தேதி களில் தில்லியில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் – உதவியாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூடுகிறது. இவற்றை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர். சிந்து தெரிவித்துள்ளார். (ந.நி.)

;