tamilnadu

img

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் முறைகேடு... மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு

புதுதில்லி:
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைப் பெண்களுக்குச் சுகாதாரமான சமையல் எரிவாயுவை இலவசமாகவழங்குகிறோம் என்று பிரதான் மந்திரிஉஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டில் அறிவித்தார்.ஆனால், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் சிலிண்டர் இணைப்புபெற்றவர்களில் 80 சதவிகிதத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களே மீண் டும் சமையல் எரிவாயு நிரப்புகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 3.21 கோடிசிலிண்டர் இணைப்புகள் மட்டுமே மீண் டும் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 1 கோடியே93 லட்சம் கோடி பயனாளர்கள் ஒரு ஆண்டில் 3 கோடியே 66 லட்சம் சிலிண்டர்களைமட்டுமே மீண்டும் நிரப்பியுள்ளனர். பயனாளி ஒருவர் ஆண்டுக்கே 2 அல்லது 3 முறை மட்டுமே நிரப்புகின்றனர்.

இதுஒருபுறமிருக்க, ‘உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டத்தின் கீழான,மானிய விலை எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில், எதிர்பாராத வகையில் மிகப்பெரும் முறைகேடும் நடந்திருப்பதாக, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) குற்றம் சாட்டியுள்ளார்.ஒரு பயனாளிக்கு ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் நிலையில், 2 லட்சத்து 61 ஆயிரம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளபயனாளிகளின் பெயரில், நாளொன்றுக்கு2 மானிய சிலிண்டர்கள் விகிதம் பெறப் பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 3 லட்சம்முறை சிலிண்டர்கள் பெறப்பட்டுள்ளன. அதுவும், இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் லிமிடெட் ஆகிய2 நிறுவனங்களிடமிருந்தும் சிலிண்டர்கள் பெறப்பட்டுள்ளன.

2016 மே முதல் டிசம்பர் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடியில், 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வாங்கப்பட்டுள்ளன. இதுதவிர, சுமார் 7,000 பேர் ஒவ்வொரு நாளும் நான்கு சிலிண்டர்களை வாங்கியுள்ளனர். 4,000 பேர், தினமும் ஐந்து சிலிண்டர்களை வாங்கியுள்ளனர். 2016 முதல் 2018 வரையிலான காலத்தில், 2.98 லட்சம் பயனாளிகள் மாதத்திற்கு 2 முதல் 20 சிலிண்டர்கள் வரை பெற்றுள்ளனர்.இதையடுத்து, “வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களால் இவ்வளவு அதிகமான நுகர்வு நடப்பதற்கு சாத்தியமில்லை”என்று கூறியுள்ள மத்திய தலைமைக்கணக்குத் தணிக்கை அதிகாரி, “மானியவிலையிலான சிலிண்டர்கள் முறைகேடான வகையில், வணிக பயன்பாட் டிற்கு திசைத் திருப்பப்படுவதைத் தடுக்க,இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாதிட்டப் பயனாளிக்கு 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் தோராயமாக ரூ.500-க்கு வழங்கப்படுகிறது. இதுவே மற்றவர்களுக்கு ரூ.800 முதல் ரூ.900 வரையிலான விலைக்கு விற்கப்படுகிறது என்பதையும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி மோடி அரசுக்கு நினைவூட்டியுள்ளார்.

;