tamilnadu

img

அபிநந்தன் மீண்டும் விமானம் ஓட்டும் தகுதி பெற்றார்

புதுதில்லி:
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தின் பயிற்சியாளராக தற்போது பணியாற்றி வருவதாகவும், அவர் மீண்டும் விமானங்களை ஓட்டும்    தகுதியைப் பெற்றுள்ளதாகவும் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீப் மார்ஷல் பி.எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.திங்கட்கிழமை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமான தளத்தில் பிஎஸ் தாணு, விங் கமாண்டர் அபிநந்தனுடன் மிக் 21 ரக விமானத்தில் பறந்துள்ளார்.இந்த விமானப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த தாணு, இந்திய விமானப்படையின் பாரம்பரியம் மிக்க மிக் 21 ரக விமானத்தின் கடைசி ஸ்குவாட்ரன் 26 பிரிவுடன் பறந்து சென்றது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாகவும், அபிநந்தன் மீண்டும் தனது பறக்கும்             தகுதியைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

தான் 1988ஆம் ஆண்டு ஒருமுறை விமானத்திலிருந்து அவசர நிலையில் வெளியேறியதாக குறிப்பிட்ட பிஎஸ் தாணு, 9 மாதங்கள் கழித்துதான் தனக்கு பறக்கும் அந்தஸ்து மீண்டும் கிடைத்ததாகவும், ஆனால் அபிநந்தனுக்கு 6 மாதங்களிலேயே பறக்கும் அந்தஸ்து கிடைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.தற்போது அபிநந்தன் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதாகவும் மிக் 21 ரக விமானத்தின் பயிற்சியாளராக அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.தனக்கும், அபிநந்தனுக்கும் இரு ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதில் ஒன்று இருவருமே விமானத்திலிருந்து அவசர நிலையில் வெளியேறிய தருணம் என்றார்.அபிநந்தனின் தந்தையுடன் தான் விமானத்தில் பறந்ததாகவும், தற்போது அபிநந்தனுடன் பறந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;