கொச்சி
இந்தியாவில் ஆண்களைப் போலவே பெண்களும் ராணுவத்தில் பணிபுரிய அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். குறிப்பாக நம் நாட்டு ராணுவத்தில் உள்ள முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு ராணுவத்தில் பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
விளையாட்டுத் துறையில் உள்ள சில வீராங்கனைகள் முப்படைகளில் பணியாற்றும் வரும் நிலையில், பீகாரைச் ஷிவாங்கி இந்திய கடற்படையின் சப் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் பெண் விமானியாக பணியாற்றவிருக்கும் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் திங்களன்று பொறுப்பேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானியாகத் தகுதிபெறும் ‘விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்துப் பொறுப்பேற்கச் செய்தார்.