அமராவதி, மே 2 -தேர்தலின்போது, பிரதமர் மட்டும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா..? எதிர்க் கட்சிகளை இஷ்டத்திற்கு விமர்சிக்கலாமா..? என்றுஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஒரு மாநில முதல்வர் புயல்வந்தாலும், மக்கள் நலனுக்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தக்கூடாது; அது விதிமீறல்என்றால், பிரதமருக்கு ஒருசட்டம், மாநில முதல்வர் களுக்கு ஒரு சட்டம் என்று தனித்தனியாகவா இருக்கிறது? என்றும் நாயுடு கேட்டுள்ளார்.