tamilnadu

img

75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்

புதுதில்லி:
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து 75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் சென்று விட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலைலா ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம்  கூறியதாவது:2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.அதிலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தகொண்டுவரப்பட்ட ஊரடங்கால்  வேலை யிழந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு மே 1 ஆம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளனர்.புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஷ்ராமிக் ரயில்கள் மூலம் இதுவரை 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளனர். பேருந்துகள் மூலம் 40 லட்சம் பேர் சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை லாரி, டிரக் போன்றவற்றில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்என உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் ரயில்கள் மூலம் செல்லலாம் என்றும், மே 1 ஆம் தேதி முதல் மாநிலம் வி்ட்டு மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;