tamilnadu

img

33 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களுக்கு ஜாமீன்.... ஆன்மீக - சமூகப் பணியை நிபந்தனை ஆக்கிய நீதிமன்றம்

புதுதில்லி:
2002 குஜராத் வன்முறையின்போது, 33 முஸ்லிம்களை படுகொலை செய்த குற்றவாளிகள் 14 பேரை, உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.இந்த ஜாமீனுக்கு, குற்றவாளிகள் ஆன்மிகப் பணிகள் மற்றும் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற புதுவிதமான நிபந்தனையை விதித்திருப்பதுடன், ஜாமீன் காலத்தில் குற்றவாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற் படுத்தித் தர வேண்டும் என்று மாவட்டநிர்வாகத்திற்கும் உத்தரவு பிறப்பித் துள்ளது.இன்றைய பிரதமர் மோடி, கடந்த2002-ஆம் ஆண்டு, குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன் முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தியும், தீயிட்டு எரித்தும் கொல் லப்பட்டனர். முதியவர்கள், பெண்கள் மட்டுமன்றி குழந்தைகளை கூட விடாமல் கொன்று குவித்தனர்.

அப்போது, சர்தார்புரா என்ற கிராமத்தில் 22 பெண்கள் உட்பட 33 முஸ்லிம் கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 73 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 31 பேர்களை மட்டும்குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டில், மேலும் 14 பேர் விடுவிக்கப்பட்டு, 17 பேருக்கு மட்டும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த 17 பேரும், தங்களுக்கான தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர். மேலும்தங்களின் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, ஜாமீனும் கோரினர்.இதனை ஏற்றுக்கொண்டுதான், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிஎஸ்.ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள்பி.ஆர். கவாய் மற்றும் சூர்யாகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு,செவ்வாயன்று ஜாமீன் வழங்கியுள் ளது.குற்றவாளிகள் குஜராத்திற்குள் நுழையக் கூடாது; மத்தியப்பிரதேசத்திற்கு இடம்பெயர வேண்டும் என்ற முதன்மை நிபந்தனையுடன், குற்றவாளிகளை இரண்டு குழுக்களாகவும் பிரித்து, ஒரு குழு இந்தூரிலும், மற்றொரு குழு ஜபல்பூருக்கு இடம்பெயர வேண்டும் என்று நிபந்தனை களை விதித்துள்ளது.

மேலும், அனைத்து குற்றவாளிகளும் வாரந்தோறும் ஆறு மணி நேரம் ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும்; இதனை அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இந்தக் காலத்தில் குற்றவாளிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

;