tamilnadu

img

புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு தொற்று...

புதுச்சேரி:
புதுச்சேரியில் புதனன்று (ஜூலை 1)  புதிதாக 30 பேருக் குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண் ணிக்கை 739 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் (ஜூலை 1) புதிதாக 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 426 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதனன்று (ஜூலை 1) செய்தியளர்களிடம் கூறியதாவது:
“புதுச்சேரியில் அதிகபட்சமாக செவ்வாயன்று (ஜூன் 30) 634 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் புதனன்று ஜூலை (1) அவர்களுள் 30 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 6 பேர் ஜிப்மரிலும், 5 பேர் மாஹே பிராந்தியத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் 5 பேர், ‘கோவிட் கேர் சென்டரில்’ 5 பேர், காரைக்காலில் 10 பேர், மாஹேவில் ஒருவர் என 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17 ஆயிரத்து 281 பரிசோதனைகள் செய்யப்பட்டுள் ளன. 16 ஆயிரத்து 180 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது. 329 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சராசரியாக 30 முதல் 35 வரை கொரோனா தொற்று பாதிப்பு வருகிறது.மத்திய அரசு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வியாழனன்று (ஜூலை 2) முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுகாதாரத்துறை சார் பில் எதைச் செய்தால் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கூற உள்ளேன். அதன் பிறகு, மத்திய அரசு சொன்னது நடைமுறைக்கு வருமா? அல்லது புதுச்சேரிக்கு சில மாற்றங்கள் வருமா? என்பது தெரியவரும். தளர்வு அளிப்பதில் தவறு இல்லை. தளர்வுக்குப் பிறகு, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

புதுச்சேரியில் 10 பேரைப் பார்த்தால் அதில் 7, 8 பேர் முகக் கவசம் அணிகிறார்கள். 60, 70 சதவீதம் பேர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள். புதனன்று (ஜூலை 1) கோயில்களுக்குச் சென்று பார்த்தேன். கோயில்களில் அனைவரையும் சோதனை செய்வது, கைகழுவ வைப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வைப்பது எனத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.அதேபோல், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கடைகளிலும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நானும், சுகாதாரத் துறை இயக்குநரும் வியாழனன்று (ஜூலை 2) காரைக்கால் சென்று, அங்கு என்ன தேவை உள்ளது என்று கேட்டறிய உள்ளோம். அதன்பிறகு மாஹே செல்ல உள்ளோம்.கொரோனா தொற்று வந்த பிறகு புதுச்சேரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடந்த 100 நாட்களாக குடும்பத்தைக் கூடப் பார்க்காமல் மக்களுக்குச் சேவை புரிந்து வருகின்றனர். அனைவருக்கும் தேசிய மருத்துவர் தினத்தை
யொட்டி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” .இவ்வாறு அவர்கூறினார்.

;