tamilnadu

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு...

புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டுள்ள தாகக் கூறினார்.