மின்னணு, சுற்றுலா மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர, தற்போதுள்ள மற்ற அனைத்து விசாக்களும் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பயணக் கட்டுப்பாடுகளுக்கு தற்போது தளர்வுகளை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், வெளிநாட்டினர், இந்தியாவை சார்ந்தவர்கள் மற்ற நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சென்று வர அனுமதிக்க முடிவு செய்துள்ளது. சுற்றுலாவைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்தியாவுக்கு வருகை தர விரும்பும் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். இதில், இந்திய வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சார்ந்த நபர்கள், அதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் பிற அனைத்து வெளிநாட்டினரும், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் வழியாக வரலாம். நீர் வழித்தடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள்.
வந்தே பாரத் மிஷனின் கீழ் இயக்கப்படும் விமானங்கள், விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் அல்லது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு திட்டமிடப்படாத வணிக விமானங்களிலும் பயணிக்கலாம். பயணிக்கும் பயணிகள் அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
புதிய விசாக்களை பெறுதல், விண்ணப்பித்தல் போன்ற பணிகளுக்கு வந்தே பாரத் மிஷன் மூலம் பெறலாம். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்ல திட்டமிட்டுள்ள வெளிநாட்டினர் தங்கள் மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம்.