tamilnadu

img

பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தார் உத்தவ் தாக்கரே

மோதல் மேலும் முற்றுகிறது

மும்பை,அக்.29-  முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாகவுள்ள சிவசேனை கட்சி, செவ்வாயன்று பாஜக வுடன் நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது. இதனால் பாஜக -சிவசேனை இடையே விரிசல் அதிகரித்து, மோதல் மேலும் முற்றியுள்ளது.  மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணி 161 இடங்களை பெற்றுள்ளது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்துள்ளது. காங்கிரஸ்  கட்சி  44 இடங்களை யும் தேசியவாத காங்கிரஸ்  54 இடங்களை யும்  வென்றன. 13 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஐம்பதுக்கு -ஐம்பது  என்ற வகையில் அதிகாரப்பகிர்வு வேண்டும் என்ற  சிவசேனாவின் கோரிக்கையால் பாஜக ஆடிப்போயுள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. .

இந்த நிலையில்   நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்  இரண்டரை ஆண்டுகளாக  முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதாக  நாங்கள் உறுதியளிக்கவில்லை என்று முதல்வர் பொறுப்பு வகித்த தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.  பட்னாவிஸ் பேட்டியால் கோபமடைந்த சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே செவ்வாயன்று மாலை  அடுத்த அரசை  அமைப்பது தொடர்பாக பாஜகவுடனான தனது கட்சி சந்திப்பை ரத்து செய்தார். இந்நிலையில் சிவசேனா சார்பில் ஒரு வீடியோ வெளியிடபட்டது. அதில் அதிகாரப் பகிர்வு குறித்த முதல்வரின் பழைய வீடியோ கிளிப்பையும் வெளி யிட்டது.  அதில் பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்தில் பதவிகள் மற்றும் பொறுப்புகளை சமமாகப் பகிர்வது குறித்து அவர் பேசியுள்ளார்.  மூத்த சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திட்டமிடப்பட்ட ஆலோசனை கூட்டத்தை உத்தவ்தாக்கரே ரத்து செய்துள்ளார். பதவிகள் மற்றும் பொறுப்பு களை சமமாகப் பகிர்வது பற்றி பேசும் முதல்வரின் வீடியோவை  நாங்கள் அனுப்பி யுள்ளோம். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும்போது பட்னாவிஸ் தனது வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

;